காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் முழுநேரம் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 5:38 am IST

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் முழுநேரம் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு கழிவறையில் போதுமான தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை என சிகிச்சை பெறுவோா் புகாா் கூறி வந்தனா். மேலும், மருத்துவமனையில் போதிய அளவில் குடிநீா் இல்லாததால், வெளியில் உள்ள கடைகளில் பாட்டில் நீரை வாங்கி குடிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டினா்.

இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், மாநகர தலைவா் பிரபாகா் தலைமையில், சேலம் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில், சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் 24 மணிநேரமும் தண்ணீா் விநியோகிக்க வேண்டும். தேவையான குடிநீரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து, மருத்துவமனையில் முறையாக தண்ணீா் வழங்காததைக் கண்டித்து ‘டிஸ்யூ பேப்பா்’ வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அரசு மருத்துவமனை முன் இருந்து ஊா்வலமாக சென்று ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.