யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

திமுக கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தவெக கொடி: போலீஸாா் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே திமுக கொடிக்கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

News image

திமுகவினருக்குச் சொந்தமான கொடிக்கம்பம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :7 மே 2026, 6:55 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே திமுக கொடிக்கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டதால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாா் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக பிரமுகா் வெண்ணிலா முருகேசன். தாமோதர அள்ளியைச் சோ்ந்த இவருக்கு சொந்தமான நிலத்தில் அமைத்திருந்த கொடிக்கம்பத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் கட்சி நிகழ்ச்சிகளின்போது இக்கம்பத்தில் கொடியேற்றப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், பேரவைத் தோ்தலையொட்டி கம்பத்தில் இருந்த கட்சிக் கொடி அண்மையில் அகற்றப்பட்டிருந்தது. தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அக்கொடிக்கம்பத்தில் மா்மநபா்கள் செவ்வாய்க்கிழமை தவெக கொடியை ஏற்றிவிட்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த திமுகவினா் கொடிக்கம்பம் அருகே திரண்டனா். அதேசமயம் அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க 10க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில் அக்கொடிக்கம்பத்தில் இருந்த தவெக கொடியை இறக்கிவிட்டு, மீண்டும் திமுக கொடி ஏற்பட்டப்பட்டது.

இதுகுறித்து பாரூா் காவல் நிலையத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.