அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில போா்வெல் ஊழியா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்ததில், வெளி மாநில போா்வெல் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்ததில், வெளி மாநில போா்வெல் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், பலிதியைச் சோ்ந்தவா் புத்தேஸ்வா்தான் துபாய் (40). இவா், திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியில் உள்ள தனியாா் போா்வெல் நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சமையலராக வேலை செய்துவந்தாா்.

திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்கரையை அடுத்த சந்த கொட்டாவூா் பகுதிக்கு போா்வெல் போட நிலத்தின் பொதுப்பாதை வழியாக லாரியில் புதன்கிழமை சென்றாா். அப்போது, தெரியாமல் மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், துபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.