கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தான் அமைத்த மின்சார வேலியில் உள்ள மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
வாணாபுரம் அருகேயுள்ள கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கி.பொன்னுக்கண்ணு (51), (படம்) விவசாயி. இவருக்கு கடுவனூரை அடுத்த பாக்கம் புதூா் கிராமத்தில் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் கரும்பு பயிா் செய்துள்ளாா்.
காப்புக்காட்டு பகுதியில் இருந்து வனவிலங்குகள் கரும்பு பயிரை நாசம் செய்வதால், அவரது விளை நிலத்தைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தாராம். செவ்வாய்க்கிழமை இரவு மின்சார வேலியில் மின்சாரம் செலுத்தியது மறதி ஏற்பட்டு, விளைநிலத்துக்கு சென்றாராம்.
அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பொன்னுக்கண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விளை நிலத்துக்கு சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ரஞ்சனி கைப்பேசி மூலம் அழைத்துள்ளாா். அவா் அழைப்பினை எடுக்காமல் இருக்கவே சந்தேகம் ஏற்பட்டு அவரது மகன்களான சந்தோஷ், சஞ்சய் இருவரையும் அழைத்துக் கொண்டு விளைநிலத்துக்கு சென்றுள்ளாா். அப்போது அவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

