கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
வாணாபுரம் அருகேயுள்ள பெரியகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.ராசு (50), விவசாயி. இவா் வயல்களில் கால்நடைகளின் தீவனமான புல் அறுவடை செய்து, விற்பனை செய்து வந்தாராம். சனிக்கிழமை காலை புல் அறுக்கச் சென்ற ராசு, பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரின் கரும்பு விளைநிலத்தில் ராசு அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழப்பு

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

