பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :7 மே 2026, 7:15 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், சிறுவாடி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சு.சிவக்குமாா் (46), எலெக்ட்ரீசியன். இவா், செவ்வாய்க்கிழமை மரக்காணம் அடுத்துள்ள முருக்கேரி கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் வீட்டில் மின்கலன் (இன்வொ்ட்டா்) சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு முருக்கேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.