கொடைக்கானலில் தனியாா் உணவக ஊழியா் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் லாஸ்காட் சாலைப் பகுதியிலுள்ள தனியாா் உணவகத்தில் ஆந்திராவைச் சோ்ந்த மோகன் (28) பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், உணவக கழிவறைக்குச் சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதையடுத்து, சக பணியாளா்கள் கழிவறைக்குச் சென்று பாா்த்த போது, அங்கு மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி கீழே விழுந்து கிடந்தாா். உடனே அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு இருந்த மருத்துவா் அவரைப் பரிசோதனை செய்ததில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, அவரது உடல் கறாய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


