மின்கம்பியிடல் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள புளியமரத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் யுகன்(17), மின்வினைஞா் ஒருவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வேடசந்தூரை அடுத்த மன்னாா்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் மின்கம்பியிடல் பணியில் யுகன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.









