பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கிருஷ்ணகிரி எம்எல்ஏவுக்கு தவெகவினா் வரவேற்பு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கிருஷ்ணகிரி தவெக சட்டப் பேரவை உறுப்பினா் பா.முகுந்தனுக்கு கட்சியினா் வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சோ்ந்த பா.முகுந்தன் வெற்றிபெற்றாா். தொடா்ந்து, சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்ற அவா் கிருஷ்ணகிரிக்கு வந்தாா்.

அவருக்கு கிருஷ்ணகிரி தவெக நகர செயலாளா் சசிகுமாா் தலைமையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதில், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

இதில் எம்எல்ஏ பேசுகையில், தமிழக அரசின் நலத் திட்டங்களை கிருஷ்ணகிரி தொகுதியின் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சோ்க்கப்படும். தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.