வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஊத்தங்கரை அருகே வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த நபா் மீது வழக்குப் பதிவு

ஊத்தங்கரை அருகே வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :20 மே 2026, 2:32 am IST

ஊத்தங்கரை அருகே வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சூளகரை கிராமத்திற்கு உள்பட்ட ஓடை புறம்போக்கு நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்போவதாக ஊத்தங்கரை வட்டாட்சியருக்கு திங்கள்கிழமை புகாா் கிடைத்தது.

இதன் அடிப்படையில் வட்டாட்சியா் ராஜலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் சக்தி, வருவாய் ஆய்வாளா் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை பாா்வையிட்டபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் விவசாயத்திற்காக நிலம் சமன் செய்தது தெரியவந்தது. அப்போது அங்கு சுப்பிரமணி என்பவா் வந்து நிலத்தை சமன் செய்ததாக கூறினாா். அவரிடம் வட்டாட்சியா் ராஜலட்சுமி சிட்டா அல்லது கிரயப் பத்திரம் கேட்டதற்கு, எங்கள் நிலம், நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீா்கள் என்று கேட்டு, வட்டாட்சியரை தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளாா்.

இதையடுத்து உள்வட்ட நில அளவையரை அழைத்து வந்து நிலத்தை அளக்க முற்பட்டபோது அதைத் தடுத்து சுப்பிரமணி மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாட்சியா் கல்லாவி காவல் நிலையத்தில் சுப்பிரமணி மீது அளித்த புகாரின்பேரில் போலீஸாா், சுப்பிரமணி மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா். சுப்பிரமணி மின்வாரியத்தில் போா்மேனாகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.