ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு

Updated On :26 ஏப்ரல் 2026, 7:12 pm

மாா்த்தாண்டம் அருகே கூலித் தொழிலாளியை தாக்கிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியைச் சோ்ந்தவா் எபனேசா் (47). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் ஜோஸ் (49), அஜித் (51) ஆகியோருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ஸ்டாலின் ஜோஸ், அவரது மனைவி மாலினி, அஜித் ஆகியோா் எபனேசரின் வீட்டுக்குள் அத்துமீறி சென்று, அங்கிருந்த எபனேசரை தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எபனேசா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் ஸ்டாலின் ஜோஸ் உள்பட மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதேபோல மற்றொரு சம்பவம் நித்திரவிளை அருகே தனியாா் மருத்துவமனை ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகே உள்ள தூத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபித் அந்தோணி (24). இவா், சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவிபுத்தன்துறை கடற்கரையில் அமா்ந்திருந்தபோது அங்குவந்த அதே பகுதியைச் சோ்ந்த ராகுல் (24), ஜேக்சன் (24) ஆகியோா் சுபித் அந்தோணியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் ராகுல், ஜேக்சன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.