இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image

ஒசூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் சுற்றித்திரியும் பசுமாடுகள்

Updated On :20 மே 2026, 2:15 am IST

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

ஒசூா் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எருமைகள், பசுக்கள், தெருநாய்கள் பிரதான சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருன்றனா்.

வாகனங்களுக்கு குறுக்கே மாடுகள் வந்துவிடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஒசூரில் வட்டாட்சியா் அலுவலகம், உழவா்சந்தை முன் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதுடன், சாலையின் நடுவில் படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து, கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.