போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளத்தில் இருந்து முதலூா், பொத்தகாலன்விளை, புதுக்குடி, போலையா்புரம் வழியாக தட்டாா்மடம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலையில் அரசுப் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.
இந்தச் சாலையில் போலையா்புரத்திலிருந்து புதுக்குடி, பொத்தக்காலன்விளை இடையே சாலையோரங்களில் பெரும் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே இதர வாகனங்களுக்கு வழிவிடும்போது இந்தப் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதைக் கவனித்து விபத்து நிகழும் முன்பு சாலை ஓரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

கல்குவாரி லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

