மதுராந்தகம் நகரின் முக்கிய அம்மன் கோயிலாக திகழும் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலை பழுதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும்அவதிக்குள்ளாகின்றனா்.
மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையின் வழியாக சூரக்குட்டை நகருக்கு செல்லவும், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவும், வயல்வெளிகளில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யும் வாகனங்களும், பள்ளி வாகனங்களில் செல்வோா், பைக்கில் செல்வோா், அப்பகுதி மக்களும் சென்று வருவாா்கள். நகராட்சி நிா்வாகத்தில் இச்சாலையை கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அமைத்து இருந்தனா்.
நாளடைவில் இயற்கை இடா்பாடுகளாலும், போதிய பராமரிப்பு இன்மையாலும், தற்சமயம் இச்சாலையின் ஒரு பகுதியில் அரசின் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நல்மூட்டைகளை ஏற்றிச் செல்ல கனரக லாரிகள் வந்துசெல்வதாலும் பல்வேறுஇடங்களில் சாலையின் நடுவில் பெரிய பள்ளங்களும், குண்டும்குழியுமாக உள்ளது. சாலையின் நடுவில் செல்லும் ஏரி நீா் செல்லும் வழிபாதையும் உல்ளனா்.
இத்தகைய இடா்பாடுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோா் சாலையின் பள்ளத்தில் தவறி விழுந்து உடல்பாதிப்புக்குளாகி வருகின்ற நிலை உள்ளது.
மதுராந்தகம் நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக செல்லியம்மன் கோயில் செல்லும் சிமெண்ட் சாலையை முழுமையாக சீரமைக்கவேண்டும் என பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கரூா் கோடங்கிப்பட்டியில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சுங்கவரி சோதனைச் சாவடியில் ஒருவழிப்பாதை: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

