பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

News image

சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியில் சேதமடைந்த சாலை.

Updated On :27 ஏப்ரல் 2026, 10:16 pm

சாத்தான்குளம்-நாசரேத் சாலை சேதமடைந்து மேடுபள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலை வழியாக திருநெல்வேலி, பேய்குளம், நாசரேத், ஆனந்தபுரம், செட்டிகுளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

இந்த நாசரேத் செல்லும் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியிலிருந்து வள்ளியம்மாள்புரம் வரை சாலை சேதமடைந்து அதிக இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால், இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

விபத்து நிகழும் முன் சேதமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.