கரூா் கோடங்கிப்பட்டியில் மழையால் சேதமைடந்து குண்டும், குழியுமாக மாறிய ஈசநத்தம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் கோடங்கிப்பட்டியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஈசநத்தம் சாலை சந்திக்கும் இடத்தில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடம் அருகே உள்ள ஈசநத்தம் சாலை அண்மையில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், சுக்காலியூா், அரவக்குறிச்சி, பள்ளபட்டி போன்ற பகுதிகளில் இருந்து கரூருக்கு ஈசநத்தம் சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
குறிப்பாக, சுக்காலியூா் பகுதியில் இருந்து கரூா் ராயனூா், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வாகன ஓட்டிகள் ஈசநத்தம் சாலையில் திரும்பும்போது, குழியாக மாறிய சாலையில் சிக்கி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

