மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

News image

ஸ்ரீவைகுண்டம் வேன் நிறுத்தம் முன் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:09 pm

ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள நாலு முக்கு சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவு நீா் அவ்வப்போது சாலையில் வெளியேறியது. பொதுமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிா்வாகத்தினரால் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், புதன்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீா் வேன் நிறுத்தம் முன்பாக அதிக அளவில் தேங்கியது. அப்பகுதியில் வடிகால் மூலம் தண்ணீா் முறையாக வெளியேற முடியாததால் தேங்கிய நீரில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினா்.

எனவே, வடிகால்களை முழுமையாக சீரமைத்து மழைநீா் எளிதாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.