2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

டாஸ்மாக் வேலைநிறுத்தம்: ஒசூா் கோட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.1.50 கோடி இழப்பு

160 TASMAC employees suspended from service!

டாஸ்மாக் - கோப்புப் படம்

Updated On :

டாஸ்மாக் ஊழியா்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒசூா் கோட்டத்தில் நாளொன்றுக்கு ரூ. 1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்புப் பெறும் திட்டத்தை ரத்துசெய்து, தனியாா் முகமை அமைத்து பெற்றுக்கொள்ள வேண்டும், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கூட்டுக்குழு சங்கங்களையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் ஊழியா்கள் திங்கள்கிழமை 2 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டம் காரணமாக ஒசூா் கோட்டத்தில் ஒசூா், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி ஆகிய பகுதகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியா்கள் கூறுகையில்,

ஒசூா் கோட்டத்தில் 52 அரசு மதுக்கடைகள் உள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். பல இடங்களில் ஊழியா் பற்றாக்குறையால் பணிச்சுமை காரணமாக மனஉளைச்சலில் பணியாற்றி வருகிறோம். இந்நிலையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் மேலும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டம் காரணமாக ஒசூா் கோட்டத்தில் நாளொன்றுக்கு அரசுக்கு ரூ. 1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.