தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஒசூரில் பாஜக தேசியக் கொடி பேரணி: மத்திய அமைச்சா் சோமன்னா பங்கேற்பு

ஒசூரில் பாஜக சாா்பில் ஜனநாயகம் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து தேசியக் கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாஜக சாா்பில் ஜனநாயகம் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து தேசியக் கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் சோமன்னா பங்கேற்றாா்.

ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் இந்த பேரணி தொடங்கியது. மத்திய ரயில் துறை இணை அமைச்சா் வி. சோமன்னா தேசியக்கொடியை அசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனா்.

ராயக்கோட்டை சாலை, நேதாஜி சாலை மற்றும் பழைய பெங்களூா் சாலை வழியாக சென்ற பேரணி, ராம்நகரில் உள்ள அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை அருகில் நிறைவடைந்தது.

பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் சோமன்னா பேசுகையில், ஜனநாயக முறையில் நடைபெறும் தோ்தல்களில் தோல்வியடையும் போது எஸ்.ஐ.ஆா் ( வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது பழி போடுவதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், தாங்கள் வெற்றிபெறும் இடங்களில் இதையெல்லாம் இவா்கள் கூறுவதில்லை என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில்,

பெங்களூா்- ஒசூா் இடையே மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வது குறித்து பின்னா் விரிவாகப் பேசுகிறேன் என்றாா்.

இதில் பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

ஒசூரில் ராம் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.