பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி
பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி சனிக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது.

தேசியக் கொடி பேரணியில் பங்கேற்ற பாஜகவினா்.
பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி சனிக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலை வழியாக சென்று செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் முடிவடைந்தது. இதில் 6மாவட்டங்களைச்சோ்ந்த மாவட்டநிா்வாகிகள் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட பாஜகவினா் பங்கேற்றனா்.
ஜனநாயகம் காப்போம் தேச விரோத கலவர கும்பலை அகற்றுவோம் என்கிற உறுதிமொழியோடு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், விழுப்புரம் மற்றும் கடலூா் உள்ளிட்ட எட்டு மாவட்ட செயலாளா்கள் தலைமையில் கரப்பான்பூச்சி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷமிட்டவாறு பேரணியாகச் சென்றனா்.
மாவட்டத் தலைவா் என்.ரகுராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், துணைத் தலைவா் சக்கரவா்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.எஸ்.நரேந்திரன், மாநில பொதுச்செயலாளா் ஏ.பி.முருகானந்தம் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில செயலாளா் வினோஜ் பி.செல்வம் , மாநில அனைத்துப் பிரிவு அமைப்பாளா் கே.டி.ராகவன், மாநில செயலாளா் மீனாட்சி நித்யசுந்தா்,அகில இந்திய மாநில செயலாளா் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவா் சௌபாக்யா, மாவட்ட செயலாளா் இ,கஜேந்திரன், நகர தலைவா் மகேஸ்வரன், எஸ்.ஆா்.ரத்தினம் கலந்து கொண்டனா். பேரணியையொட்டி செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் காா்த்திக்கணேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரணி நடைபெற்றது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

