தில்லி காவல் துறை என்ன செய்கிறது? அபிஜீத் தீப்கே கைதுக்கு மமதா கண்டனம்!
தில்லியில் தேசியக் கொடி பேரணி நடத்த முயன்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டதற்கு மமதா பானர்ஜி கண்டனம்...

அபிஜீத் தீப்கே - மமதா பானர்ஜி - கோப்புப் படம்
தில்லியில், தேசியக் கொடி பேரணி நடத்த முயன்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியில், ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக, இன்று (அக். 16) தேசியக் கொடி பேரணி நடத்தப்படும் என அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.
ஆனால், பேரணிக்கு முன்பாகவே அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டது அறிவிக்கப்படாத அவசரநிலைக்குக் குறைவானது அல்ல எனக் கூறி மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“தில்லி காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தியதற்காக அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் இளைஞர்கள் சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் நிலைநாட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது அறிவிக்கப்படாத அவசரநிலையைத் தவிர வேறு எதுவுமில்லை. மாற்றுக்கருத்துகளைக் கண்டு அஞ்சும் ஒரு அரசு ஒட்டுமொத்த தலைமுறையையும் மிரட்டி அமைதியாக்க முயற்சி செய்கிறது. தங்களால் கட்டுப்படுத்த முடியாத குரல்களை பொறுத்துக்கொள்ள முடியாத பாசிச அரசின் செயல்பாடு இது” எனக் கூறியுள்ளார்.
Summary
Mamata Banerjee has condemned the arrest of Abhijit Dipke, founder of the cjp, who attempted to hold a national flag rally in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


