சௌதி விமான நிலையத் தாக்குதல்: படுகாயமடைந்த இந்தியர்களுக்குத் தீவிர சிகிச்சை!
ரியாத் விமான நிலையத்தின் மீதான ஹௌதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த இந்தியர்கள் 2 பேருக்குத் தீவிர சிகிச்சை...

ரியாத் விமான நிலையத் தாக்குதல்... - AP
சௌதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த இந்தியர்கள் இருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த சனிக்கிழமை (அக். 10) யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், இந்தியர் ஒருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதுடன், 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், ஏராளமான இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், படுகாயமடைந்த இந்தியர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் தீவிர கண்காணிப்புப் பிரிவிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக, சௌதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று (அக். 16) அறிவித்துள்ளது.
முன்னதாக, யேமனில் சௌதியின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதி படைகளுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல் வெடித்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டாளியான சௌதி அரேபியாவுக்கு, செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் வழியாகச் செல்வதற்குத் தடை என ஹௌதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
2 Indians, who sustained severe injuries in an attack on the Riyadh airport are currently undergoing intensive medical treatment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


