அபிஜீத் தீப்கே, நேஹா போராவுக்கு தடுப்புக்காவல்!தேசியக் கொடி பேரணி செல்ல முயன்ற அபிஜித் தீப்கே கைது!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிறைவு!இந்தியப் பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வு!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

வீணாகும் உணவும் பசியும்! ஓராண்டில் குப்பையில் கொட்டப்படும் உணவின் மதிப்பு தெரியுமா?

உலக உணவு நாளையொட்டி பசியால் பாதிக்கப்படும் நாடுகள் மற்றும் உணவை வீணாக்கும் நாடுகள் பற்றி...

World Food Day: countries affected by hunger and countries waste food

சோமாலியா நாட்டில்... - IANS

Updated On :

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு அல்லது வீணாக்கும் உணவு பலருக்கும் கிடைப்பதில்லை என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் உணவின்றி பசியால் வாடுகின்றனர், இறந்தும் போகின்றனர்.

உலக உணவு நாள்

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) 1945-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக். 16 ஆம் தேதி உலக உணவு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகில் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்கவும் பசியில்லா சூழ்நிலையை உருவாக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டின் உணவு நாள் கருப்பொருள் - தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, பாதுகாப்பான, சத்தான மற்றும் மலிவு விலை உணவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதாகும்.

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு சுமார் 645 மில்லியன் (64.5 கோடி) - 7.8% மக்கள் பசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இதுவே 2022ல் 8.6% ஆகவும் 2024ல் 8.1% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா காலத்தை ஒப்பிடுகையில் தற்போதைய பசி குறியீடு விகிதம் குறைந்துள்ளது.

வீணாகும் உணவு

விவசாய நிலத்திலிருந்து உணவு மேசை வரை பல நிலைகளில் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவது குறித்தும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

எஃப்ஏஓ தரவுகளின்படி, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் சுமார் 13 சதவீதம் அறுவடைக்குப் பின்பு, அதாவது கடைகளைச் சென்றடைவதற்கு முன்பே வீணாவதாகக் கூறுகிறது. உணவு சேமிப்பு, போக்குவரத்து, பதப்படுத்தும் செயல்முறைகளின்போது வீணாவதாகவும் இதில் பழங்கள், காய்கறிகளே அதிக அளவில் வீணாக்கப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கடைகளைச் சென்றடைவதற்கு முன்பே வீணாகும் உணவின் மதிப்பு ஆண்டுக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (தோராயமாக ரூ. 22 லட்சம் கோடி) அதிகம் என்று எஃப்ஏஓ கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) தகவல்படி, உணவில் சுமார் 5-ல் ஒரு பங்கு, அதாவது 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.05 பில்லியன் டன்கள் (105 கோடி டன்) உணவு வீணாக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு, 60 சதவீதம் வீடுகளிலிருந்தும், 28 சதவீதம் உணவகங்கள், பிற உணவுச் சேவை நிறுவனங்களிலிருந்தும், 12 சதவீதம் கடைகளிலிருந்தும் வீணாகிறது.

நபருக்கு 132 கிலோ

இதுவே சராசரியாக உலகளவில் ஓராண்டுக்கு ஒரு நபர் 132 கிலோ உணவை வீணாக்குகிறார். இதில் 79 கிலோ உணவு வீடுகளில் இருந்து வீணாக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

உலக நாடுகளில் மாலத்தீவுதான் அதிக உணவை (ஆண்டுக்கு 260 கிலோ) வீணாக்குவதாக ஐ. நா. கூறுகிறது.

சிரியா, டொமினிகன் குடியரசு, செஷெல்ஸ், மெக்சிகோ, துனிஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நபருக்கு 210 கிலோவுக்கும் அதிகமாக உணவை வீணடிக்கின்றன.

ஸ்பெயின் நாடு மிகவும் குறைவாக 39 கிலோ உணவை மட்டுமே வீணாக்குகிறது.

ஓராண்டுக்கு வீணாகும் உணவின் மதிப்பு சராசரியாக ஒரு ட்ரில்லியன் டாலர் (ரூ. 94.54 லட்சம் கோடி)

பசியால் அதிகம் பாதிக்கும் நாடு

உலகளவில் ஆப்பிரிக்காவில்தான் மக்கள் பசி, பட்டினியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 2025-ல் 30.9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் சோமாலியா முதலிடத்தில் இருக்கிறது. பசியால் அதிகம் பாதிக்கப்படும் 8 நாடுகளில் 7 நாடுகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. சூடான், தெற்கு சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்.

உலக பசி குறியீட்டில் இந்தியா 123 நாடுகளில் 102 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவே ஆசியாவில் 29.2 கோடி மக்கள் (மக்கள்தொகையில் 6%), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 3.2 கோடி மக்கள் (4.8%) உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவை வீணாக்குவது சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் 8 - 10 சதவீதம் உணவு வீணாக்குவதால் ஏற்படுகிறது. இதில் நிலப் பரப்பில் உணவு அழுகும்போது வெளியேறும் மீத்தேன் வாயுவும் அடங்கும்.

அதனை உணவை முடிந்தவரை வீணாக்காமல் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துகிறது.

தேவையான அளவு மட்டும் உணவுப்பொருள்களை வாங்கவும் சமைக்கவும் கூடுதலான உணவுப்பொருள்களை அல்லது உணவுகளை முறையாக சேமித்து வீணாக்காமல் சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

Summary

World Food Day: countries affected by hunger and countries waste food

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.