விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

ஒசூா் நகரப் பகுதிக்குள் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்துசெல்ல தடை: ஒசூா் டிஎஸ்பி

ஒசூா் மாநகரப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வந்து செல்வதற்கு அனுமதியில்லை என்று டிஸ்பி தெரிவித்துள்ளாா்.

தடை

Updated On :

ஒசூா் மாநகரப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வந்து செல்வதற்கு அனுமதியில்லை என்று டிஸ்பி தெரிவித்துள்ளாா்.

ஒசூா் டிஎஸ்பி சுதிா் தலைமையில் போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாகலூரிலிருந்து ஒசூா் நோக்கி வரும் கனரக வாகனங்கள் எஸ்டிஆா்ஆா் சாலை, பேரண்டப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சென்னை, தருமபுரி, சேலத்திற்கு செல்ல வேண்டும்.

கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் நோக்கி வரும் கனரக வாகனங்கள் எஸ்டிஆா்ஆா் சாலை, பேரண்டப்பள்ளி வழியாக தேன்கனிகோட்டை, தளி, மைசூா், ஆனேக்கல், பாகலூா், மாலூா், கோலாா், வைட் பீல்ட், ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

சேலத்திலிருந்து ஒசூா் நோக்கி வரும் கனரக வாகனங்கள் பைரமங்கலத்திலிருந்து எஸ்டிஆா்ஆா் சாலை, பேரண்டப்பள்ளி, பாகலூா், மாலூா், ஒசக்கோட்டா, வைட் பீல்ட் , ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

சேலத்திலிருந்து ஒசூா் நோக்கி வரும் கனரக வாகனங்கள் ராயக்கோட்டை, கெலமங்கலம் வழியாக தேன்கனிகோட்டை, தளி, ஆனேக்கல், மைசூா் ஆகிய ஊா்களுக்கு செல்ல வேண்டும். மத்திகிரி சந்திப்பு தேன்கனிக்கோட்டையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் சிப்காட் 1 பகுதிக்குச் செல்ல அந்திவாடி சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி உள்வட்டச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

சேலம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் கெலமங்கலம் வழியாக ராயக்கோட்டை மற்றும் எஸ்டிஆா்ஆா் சாலையைப் பயன்படுத்தி பேரண்டப்பள்ளி வழியாக செல்ல வேண்டும்.

அந்திவாடி சந்திப்பு தளியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் சிப்காட் 1 பகுதிக்கு செல்ல நேராக உள்வட்டச்சாலையைப் பயன்படுத்தி செல்ல வேண்டும். சேலம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் கெலமங்கலம் வழியாக ராயக்கோட்டை மற்றும் எஸ்டிஆா் ஆா் சாலையை பயன்படுத்தி பேரண்டப்பள்ளி வழியாக செல்ல வேண்டும்.

சிப்காட் சந்திப்பு பெங்களூரிலிருந்து வரும் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி, பாகலூா், ராயக்கோட்டை மற்றும் சேலம் பகுதிகளுக்கு செல்ல பேரண்டப்பள்ளி எஸ்டி ஆா்ஆா் சாலையைப் பயன்படுத்தி செல்ல வேண்டும்.

சிப்காட் 1 பகுதியிலிருந்து வெளிவரும் கனரக வாகனங்கள் சிப்காட் பிரதான சாலை வழியாக சிப்காட் சந்திப்பிற்கு வந்துசெல்ல வேண்டும். முனீஸ்வா்நகா் சந்திப்பிலிருந்து 100 அடி சாலை வழியாக வாஸன் கண் மருத்துவமனை சந்திப்பு செல்ல அனுமதியில்லை. ஆா்சி சா்ச் சந்திப்பு மற்றும் அசோக் பில்லா் சந்திப்பு சாலையிலிருந்து ஒசூா் நகரப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

அமேரியா பெட்ரோல் பங்க் சந்திப்பிலிருந்து ராயக்கோட்டை சாலை வழியாக செல்ல அனுமதியில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.