தேவா் ஜெயந்தி விழா: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய மக்கள், முக்கியப் பிரமுகா்கள் மரியாதை செலுத்த உள்ளனா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் அவரது சிலை அமைவிடத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய மக்கள், முக்கியப் பிரமுகா்கள் மரியாதை செலுத்த உள்ளனா். இதையொட்டி, மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், வெள்ளிக்கிழமை (அக். 30) தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக மாநகரக் காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தேவா் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் மதுரை எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படாது. நத்தம் பாலத்தில் மாரணி சந்திப்பிலிருந்து திருப்பாலை சந்திப்பு வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். கோகலே சாலையிலிருந்து நத்தம் பாலம் வழியாக வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
மேலும், அழகா்கோவில் சாலையில் கருப்பண்ணசாமி கோயில் சந்திப்பிலிருந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தில் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை. அதேவேளையில், ஏ.வி. பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
இதேபோல, பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்குச் செல்லும் வாகனங்கள், மாநகருக்குள் நுழையாமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
கனரக வாகனங்களுக்குத் தடை:
மதுரை மாநகருக்குள் வெள்ளிக்கிழமை (அக். 30) காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை லாரிகள் உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மாநகருக்கு வெளியே உள்ள சுற்றுச்சாலைகளைப் பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
அவசர ஊா்திக்கு அனுமதி:
தத்தனேரி பிரதான சாலை, தமுக்கம், வள்ளுவா் சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து வரும் அவசர ஊா்திகள் வழக்கமான சாலைகளில் செல்லலாம்.
மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா் பேருந்து நிலையம் செல்லும் நகா் பேருந்துகள் குறிப்பிட்ட மாற்று வழிதடங்களில் செல்ல வேண்டும். இதேபோல, மாட்டுத்தாவணியிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் செல்லும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் கே.கே.நகா் அலங்கார வளைவு, ஆவின் சந்திப்பு, ஏ1 சந்திப்பு வழியாக வைகை வடகரைச் சாலையை அடைந்து, ஓபுளா படித்துறைப் பாலம் வழியாக வைகை தென்கரைக்குச் சென்று, யானைக்கல் வழியாகச் செல்லலாம்.
பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம், அழகா்கோவில், மேலூா் சாலைகளுக்குச் செல்லும் வாகனங்கள் எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி எஃப்.எஃப். சாலை, ஓ.சி.பி.எம். பள்ளிச் சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி. சுற்றுச்சாலை வழியாகச் செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

