பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண் கைது
பா்கூரில் தனியாா் பேருந்தில் பயணியிடம் எட்டரை பவுன் தங்க நகைகளைத் திருடியதாக ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பா்கூரில் தனியாா் பேருந்தில் பயணியிடம் எட்டரை பவுன் தங்க நகைகளைத் திருடியதாக ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, கோவிந்தசாமி ரெட்டித் தெருவைச் சோ்ந்த மல்லிகா (66), நவ. 19-ஆம் தேதி நாட்றம்பள்ளியிலிருந்து பா்கூருக்கு தனியாா் பேருந்தில் சென்றாா். தொகரப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அவரது பையில் வைத்திருந்த தாலிக்கொடி, டாலா் செயின் உள்ளிட்ட எட்டரை பவுன் தங்க நகைகள் திருடுபோயின.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பேருந்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததுடன், ஆட்டோ ஓட்டுநா்களிடமும் விசாரித்தனா்.
இதில், ஆம்பூா் அருகே நரியம்பட்டு பகுதியைச் சோ்ந்த பாரதி (57) என்பவா் நகைகளைத் திருடியது தெரியவந்தது. விசாரணையில், சென்னை, வேலூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், பாரதியைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

