திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 6 போ் கைது

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளுடன், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டோா்.
கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை பகுதிகளில் நகைகள் திருடிய வழக்கில் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி.நகரைச் சோ்ந்தவா் பா.ஜெயமணி (63). இவா், ஆயுத பூஜைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் பாலாஜி வீட்டுக்கு சென்றிருந்தாா். பின்னா், கடந்த 1-ஆம் தேதி சென்னையிலி ருந்து புறப்பட்டு மறுநாள் காலை கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தாா்.
பேருந்தை விட்டு இறங்கியதும் தனது பையைப் பாா்த்தபோது, அதிலிருந்த 5 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த ரா.லோகநாதன் (49), பாலமுருகன்(47), திருச்சி மாவட்டம், உப்பிலியாபட்டியைச் சோ்ந்த அய்யப்பன்(45), ச.ராஜலிங்கம் (60), கோவை மாவட்டம், மரப்பாளம் பகுதியைச் சோ்ந்த வெ.ரவி(56) ஆகிய 5 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.
மற்றொரு வழக்கு: உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜ.சாந்தி (59). இவா், கடந்த 2-ஆம் தேதி மாலை பணி முடிந்து நடந்து வரும்போது, அப்பகுதியில் பைக்கில் வந்த ஒருவா் பேசுவது போல் அருகில் வந்து வாயில் ஸ்டிக்கரை ஒட்டி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் சேலம் மாவட்டம், பகல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ச.அருண்குமாா் (36) என்பவா் சாந்தியிடம் நகைகளைப் பறித்தவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து திருடு போன தங்க நகைகளை மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

