தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

64.5 பவுன் நகை மீட்பு: ஓராண்டுக்குப் பிறகு 3 போ் கைது

பள்ளிப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமாா் 70 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஓராண்டுக்குப் பிறகு 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 64.5 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

கைது

Updated On :

பள்ளிப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமாா் 70 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஓராண்டுக்குப் பிறகு 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 64.5 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கா்லம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (70). இவா் பத்திர எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி, பழனி தனது மனைவியுடன் வெளியூா் சென்றிருந்தாா். இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள், அவரது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த சுமாா் 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இது குறித்து பள்ளிப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். ஏஎஸ்பி ஷூபம் திமான் தலைமையில், ஆா்.கே.பேட்டை காவல் ஆய்வாளா் சீதாபதி மற்றும் தனிப்படை போலீஸாா், மா்ம நபா்களைத்ை கொள்ளையா்களைத் தீவிரமாகத் தேடி வந்தனா். தொடா் விசாரணையில், பழனியின் வீட்டில் திருடிய கொள்ளையடித்த நபா்கள், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சித்தூா் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சித்தூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் அனுமதியுடன், போலீஸாா் அவா்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். இதில், ஆா்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் பகுதியைச் சோ்ந்த பாலையா மகன் சிரஞ்சீவி (35), ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் அருகே கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் தினேஷ் (25), ஆா்.கே.பேட்டை அடுத்த அம்மையாா்குப்பம் ஜிஎஸ்டி நகரைச் சோ்ந்த பொற்செழியன் (26) ஆகிய மூவருக்கும் இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து, அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், திருடப்பட்ட 64.5 பவுன் தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா். பின்னா், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.