ஒசூா், சூளகிரியில் 3 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்து
ஒசூா், சூளகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 30-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம் - கோப்புப் படம்
ஒசூா், சூளகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 30-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம், ஒசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் (ம) புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்புத் திட்டம் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, ஒசூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகள், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகள் மற்றும்
தளி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளுக்கு தினசரி வடிவமைக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் குந்துமாரணப்பள்ளி அருகில் என்.எச்.844 சாலையில் 700 எம்.எஸ். மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக வரும் 30 முதல் டிச. 2-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஒசூா் மாநகராட்சி, ஒசூா் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் சூளகிரி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் மற்றும் தளி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க இயலாது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் இந்த மூன்று நாள்களுக்கு உள்ளுா் நீா் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

