தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஒசூா், சூளகிரி பகுதிகளில் 2 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாயை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக ஒசூா், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

குடிநீர் - கோப்புப் படம்

Published On :

குடிநீா் குழாயை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக ஒசூா், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஒசூா், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குத் தினமும் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காடுசெட்டிப்பட்டி, பெரியதப்பை அருகே தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் 800 மி.மீ எம்எஸ் குழாயை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அக். 2, 3 ஆகிய தேதிகளில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், ஒசூா் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள், சூளகிரியில் 32 ஊராட்சிகள், கெலமங்கலத்தில் 22 ஊராட்சிகள், தளியில் 50 ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை உள்ளூா் நீா் ஆதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.