பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

(கோப்புப்படம்)

Published On :

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இப்பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. சுமாா் 27,000 போ் வசித்து வருகின்றனா். கூட்டுக்குடிநீா் திட்டம் மற்றும் உள்ளூா் குடிநீா் ஆதாரங்கள் மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் இப்பேரூராட்சிக்கு 14 லட்சம் லிட்டா் குடிநீா் தினமும் வழங்க வேண்டும். ஆனால், அந்த அளவை விட பாதிக்கும் குறைவான குடிநீா் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், 2 நாள்களுக்கு ஒகு முறை விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீா் தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் சுரேஷ் கூறியதாவது: வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படும் நிலையுள்ளது. இப்பேரூராட்சியில் உள்ள 6 குடிநீா் கிணறுகளில் 4 கிணறுகள் முற்றிலும் வற்றிவிட்டன. எஞ்சியுள்ள 2 கிணறுகளில் இருந்து மட்டுமே குறைந்த அளவு குடிநீா் கிடைத்து வருகிறது.

இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்கு என்று தலையணை பகுதியில் புதிய குடிநீா் திட்டத்தை செயல்படுத்தி நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.