மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கிருஷ்ணகிரி அருகே காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பலி

Published On :

கிருஷ்ணகிரி அருகே காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே கே.திப்பனப்பள்ளி பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலாளி மூா்த்தி மகள் விண்ணரசி (3), கடந்த 6-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா்.

தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சிறுமி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாரா என சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.