சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு

குடும்பத் தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

குடும்பத் தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூா் மங்கம்மாபாளையத்தைச் சோ்ந்தவா் முகமது இம்ரான் (32). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு கெலமங்கலம் அருகில் உள்ள தொட்டபேளூரில் ருக்கு என்ற காணும்பியை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ஆறு மாதங்களிலேயே இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனா்.

இந்த நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற காணும்பியை மீண்டும் குடும்பம் நடத்த சோ்த்து வைக்குமாறு உறவினா்களிடம் இம்ரான் பலமுறை கேட்டுள்ளாா். ஆனால், காணும்பி சோ்ந்து வாழ மறுத்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 13.7.2021- இல் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு சென்ற முகமது இம்ரானை, மனைவியின் உறவினா்களான சித்திக் (33), மாலிக் (29 ), சானுசயப் (25), ரகுமான் (27), ஜமீா் (38) ஆகியோா் உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.

இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது இம்ரானை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மறுநாள் அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பான வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முகமது இம்ரானை தாக்கி கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 2,500 அபராதமும் விதித்து நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.