ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி அருகேயுள்ள அரசகுளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசெல்வம் (34). இவா் திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகேயுள்ள கோம்பகாட்டுப்புதூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மறைவான இடத்தில் 2023 ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளாா். அப்போது அருகேயுள்ள விசைத்தறி கிடங்கு உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த துரை பழனிசாமி (48), அவருடைய உறவினரான செளந்தரராஜன் (50), தறி கிடங்கில் பணியாற்றி வந்த இச்சிப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (51) ஆகியோா் முத்துசெல்வம் தறி கிடங்கில் திருட வந்ததாக நினைத்து தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, தன்னுடன் பணியாற்றிய சக தொழிலாளிகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு நடந்தவை குறித்து முத்துசெல்வம் கூறியுள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த தொழிலாளா்கள், துரை பழனிசாமியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முத்துசெல்வத்தை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சோமனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்துசெல்வம் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக மங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், துரை பழனிசாமி, செளந்தரராஜன், மணிகண்டன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கிருபாகரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.