
கொலை வழக்கு: முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 27 அமா்வுகள் மூலமாக 4,085 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

சிறை - பிரதிப் படம்
கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பூா் மாநகரம், மங்கலம் அருகே பழனிசாமி என்பவரைக் கொலை செய்த வழக்கில் சாமளாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் விநாயக பழனிசாமி (61) என்பவரை போலீஸாா் கடந்த 2025 செப்டம்பா் 10-ஆம் தேதி கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விநாயக பழனிசாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





