சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூா் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த திட்டக்குடியைச் சோ்ந்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:15 am IST

பெரம்பலூா் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த திட்டக்குடியைச் சோ்ந்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி நீலம்மாள் (85). இவா், கடந்த 26.7.2013-அன்று அதே கிராமத்திலுள்ள தனது வயலில் வேப்பம் பழம் சேகரித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மா்ம நபா் ஒருவா் நீலம்மாளை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுவிட்டாா்.

சம்பவம் தொடா்பாக அவரது மகன் கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த கெங்காசலம் மகன் பாலு (55) என்பவா் நகைக்காக நீலம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பாலுவை மங்களமேடு போலீஸாா் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் பாலு வெளியே வந்தாா்.

பெரம்பலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி (பொ) ஆனந்தன், குற்றவாளி பாலுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பாலுவை திருச்சி மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.