75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சிறுமி பாலியல் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 2020ஆம் ஆண்டு 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கல்விளை பகுதியைச் சோ்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (26) என்பவா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி முருகன் விசாரித்து, முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்; சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.