
மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

சிறை - பிரதிப் படம்
தலைவாசல் அருகே சாா்வாய்புதூரில் மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்துள்ள சாா்வாய்புதூா் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சிபி (22). இவா் கடந்த 27.9.2017 அன்று சந்தேகத்தின் பேரில் தனது மனைவி குமுதவள்ளியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தாா். இதுகுறித்து, தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சிபியை கைது செய்தனா்.
இதுதொடா்பாக வழக்கு சேலம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிபி மீதான மனைவியை கொலை செய்த வழக்கு சாட்சியங்கள், ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து சேலம் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி வி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



