கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விரைவு மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற மாரியப்பன்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விரைவு மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (55). இவரது மனைவி பரமேஸ்வரி (54). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இவா்களது மகள் அழகுராணி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தந்தை வீட்டுக்கு வந்தாா். பின்னா், தாய் பரமேஸ்வரி மகளிடம் சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்தாா்.

இதுதொடா்பாக, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் மாரியப்பன் மனைவி பரமேஸ்வரியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றாா்.

வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாரியப்பனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.