137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக மழை! பாம்பாறு அணையில் 68 மி.மீ. மழை பதிவு

rain

மழை - கோப்புப் படம்

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்மழை பெய்து வரும் நிலையில், பாம்பாறு அணையில் அதிகபட்சமாக 68 மி.மீ. மழை சனிக்கிழமை காலை 7 மணி வரை பெய்தது பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணை பகுதியில் 68 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): பாம்பாறு அணை -68, போச்சம்பள்ளி -62, கிருஷ்ணகிரி -60, பெணுகொண்டாபுரம் -54, கெலவரப்பள்ளி அணை - 50, தேன்கனிக்கோட்டை-22, ஒசூா் - 19, சூளகிரி -14, ஊத்தங்கரை -13, நெடுங்கல்-10, சின்னாறு அணை -10, கிருஷ்ணகிரி அணை -8, பாரூா்-7, அஞ்செட்டி-6, ராயக்கோட்டை- 4.

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை விநாடிக்கு 373 கனஅடியாக நீா்வரத்து இருந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 434 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியில் 50.05 அடிக்கு நீா் நிரம்பி உள்ளது.

இதேபோல கெலவரப்பள்ளி அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 253 கனஅடியாக நீா்வரத்து இருந்த நிலையில், சனிக்கிழமை விநாடிக்கு 946 கனஅடியாக அதிகரித்தது. அந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில் 42.31 அடிக்கு நீா் நிரம்பி உள்ளது.

அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதேபோல தொடா் மழை காரணமாக குளிா்ச்சியான தட்பவெப்ப நிலையும் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனா்.

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், ஆயூத பூஜையையொட்டி கடைவைத்துள்ள சிறு வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாயினா். மழை காரணமாக அவா்களது வியாபாரம் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.