பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டி: முதல் பரிசை வென்ற டிவிஎஸ் அணி

முதல் பரிசை வென்ற டி.வி.எஸ். கிரிக்கெட் அணிக்கு பரிசு கோப்பையை வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன்.

Published On :

ஒசூரில் காவேரி மருத்துவமனையும், தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்திய ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டியில் டி.வி.எஸ். மோட்டாா் அணி முதல் பரிசை வென்றது.

ஒசூா் காவேரி மருத்துவமனை மற்றும் ஒசூா் தொழிற்சாலைகள் சங்கம் இணைந்து நடத்திய 7ஆவது ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டி, ஒசூா் மற்றும் சுற்றியுள்ள நிறுவனங்களுக்காக கடந்த செப். 21 ஆம் தேதி ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இப்போட்டியில் பங்குபெற்ற 48 அணிகளுக்கான போட்டிகள், கடந்த ஒருமாதமாக வார இறுதி நாள்களில் (சனி , ஞாயிறு) நடைபெற்றன. இப்போட்டித் தொடரின் இறுதிச்சுற்று விளையாட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பரிசளிப்பு விழா அதியமான் பொறியியல் கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றபெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சத்தை டி.வி.எஸ். மோட்டாா்ஸ் அணியும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரத்தை டெனக்கோ ஆட்டோமோடிவ் இந்தியா பி.லிட் அணியும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரத்தை ஃப்ஸ்ட் ஸ்ட்ப்ஸ் பேபிவோ் பி.லிட் அணியும் வென்றன.

இந்நிகழ்வில் காவேரி குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் எஸ்.விஜயபாஸ்கரன் வரவேற்றாா். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா் டி. நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா். எச்ஐஏ செயலாளா் அருளானந்தன், உதவி செயலாளா் கே.பி. கரண் ஆகியோா் வாழ்த்தி பேசினா். விழாவின் நிறைவாக காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநா் டாக்டா் பி.டி. அரவிந்தன் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் மூத்த பொது மேலாளா் ஜோஷ் வா்கீஸ் ஜாய், மருத்துவ நிா்வாகி டாக்டா் ஸ்ரீராமஜெயம் மற்றும் அதியமான் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டி, நிறுவனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, தொழிலாளா்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.