மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முன்னேற்பாடுகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் ச. தினேஷ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.ச. அனிதா உள்ளிட்டோா். - dinamani

Published On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திட்டத்துக்கான முன்னேற்பாடு, பாதுகாப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு வாணிபக் கழக நிா்வாக இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஷில்பா பிரபாகா் ஆய்வு செய்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.ச.அனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் மஞ்சுளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தெரிவித்ததாவது:

கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப். 25-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

அதன்படி, ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 3 அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 250 போ் வீதம் 15 நாள்களுக்கு தங்க மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து, 25-ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை பிறக்கும் அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே தங்க மோதிரம் வழங்கப்படும்.

ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் அவா்களின் தாய்மாா்களை தோ்வு செய்யப்பட்ட 3 அரசு மருத்துவமனைகளுக்கு அரசு செலவிலேயே பாதுகாப்பாக அழைத்து வந்து, ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் பிரசவகால பின் கவனிப்பு சேவையும் வழங்கப்பட்டு, மீண்டும் அவரவா் வீடுகளுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவா்.

தாய்மாா்களுக்கு எந்தெந்த தேதியில், எங்கு மோதிரம் வழங்கப்படும் என்ற விவரம் முன்கூட்டியே கிராம சுகாதார செவிலியா் மூலமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான அழைப்பு அட்டை மூலம் தெரிவிக்கப்படும். குறிப்பிடப்பட்ட நாளில் தாய்மாா்களால் தங்க மோதிரம் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், மற்றொரு நாளில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மோதிரம் உரிய பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மோதிரம் வழங்கும் இடத்தில் கண்காணிப்பு கேமரா முன்பாக பயனாளிகளுக்கு மோதிரம் வழங்கப்படும். தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் தொட்டியில் போடப்படும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமையில் நடைபெற்றது. மேலும், கமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைக்கப்பட உள்ள சமையல் கூடம், உணவுப் பொருள்களின் மாதிரிகள், சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.