ஒசூரில் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ. 25,000 அபராதம்
ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்
ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் முகமத் சபீா் ஆலம் தெரிவித்துள்ளாா்.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் இதர கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. சூசூவாடி மற்றும் சீதராம் மேடு பகுதிகளில் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.
ஒசூரில் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கட்டடக் கழிவுகள் மற்றும் இதர தொழிற்சாலை கழிவுகளை உரிய முறையில் சேகரித்து அங்கீகரிக்கப்பட்ட முறையில் அகற்ற வேண்டும். கட்டடக் கழிவுகள், இதர தொழிற்சாலை கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் முகமத் சபீா் ஆலம் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





