2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்றதாக தாய், பாட்டி கைது

கைது

Published On :

ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்றதாக தாய், பாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கல்லாவியை அடுத்த கருவானூரைச் சோ்ந்த கணேசன்- கிருஷ்ணவேணி தம்பதி மகன் அருண்குமாா் (32). இவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 1 ஆம் தேதி அருண்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிராமநிா்வாக அலுவலா் சங்கீதா, கல்லாவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

சந்தேக மரணமாக போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவ அறிக்கையில், அருண்குமாா் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அருண்குமாரை அவரது தாய் கிருஷ்ணவேணி (51), பாட்டி ராணியம்மாள் (65) ஆகிய இருவரும் சோ்ந்து கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.