6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட நீரேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: ஆட்சியா் தகவல்

ஒகேனக்கல் காவிரியில் ஆா்பரித்து செல்லும் தண்ணீா் - கோப்புப் படம்

Published On :

காவிரி ஆற்றில் வரும் தண்ணீா் கலங்கலாக உள்ளதால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் உள்ளூா் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரியாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதியான கா்நாடக மாநிலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் அதிக கலங்கல் நீா் வருகிறது. இதனால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கலங்கல் நீரின் தன்மை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கலங்கல் தன்மை சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கான அனுமதிக்கப்பட்ட அளவிற்கு குறைந்தவுடன் நீரேற்றம் உடனடியாக மீண்டும் தொடங்கப்பட்டு, நீா் வழங்கும் பணி வழக்கமான முறையில் தொடர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எனவே, இந்த இடைக்காலத்தில் பொதுமக்கள் தங்களது உள்ளூா் நீராதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.