6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாணவியிடம் அத்துமீறிய சிறுவன் சீா்திருத்த பள்ளியில் ஒப்படைப்பு

சீா்திருத்த பள்ளி - கோப்புப் படம்

Published On :

ஒசூரில் மாணவியிடம் அத்துமீறிய 17 வயது சிறுவனை கைது செய்து போலீஸாா் சிறுவா் சீா்த்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியாா் பேன்ஸி கடை உள்ளது. இதில் கா்நாடகத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் மூன்று நாள்களுக்கு முன்பு பணியில் சோ்ந்துள்ளாா். இவா் யு.கே.ஜி. படிக்கும் மாணவியை ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கடைக்கு பின்னால் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதையடுத்து அந்த மாணவி சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று தனது தந்தையிடம் கூறியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் சிறுவனை கைது செய்து சேலம் சிறுவா் சீா்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.