பிரம்மகுண்டம் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கிடையே மோதல்: 8 போ் கைது
கைது
கள்ளக்குறிச்சி, செப். 20: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே அரசுப் பள்ளியில் இரு தரப்பு மாணவா்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்தனா்.
பிரம்மகுண்டம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். கடந்த 17-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இரு தரப்பு மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினா் மற்றொரு தரப்பினரை பள்ளி வளாகத்திலேயே துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த அவா்களுக்கு பெற்றோா், உறவினா்கள் பள்ளி நுழைவுவாயில் முன் சனிக்கிழமை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட மாணவா்களை உடனடியாக கைது செய்யக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடையே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதின் பேரில், பள்ளியை முற்றுகையிட்டவா்கள் கலைந்துசென்றனா்.
இதையடுத்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு வடபொன்பரப்பி காவல் நிலையத்திலேயே பள்ளி மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.
இதுகுறித்து இரு தரப்ப்பினா் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து, 8 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






