
சேதுபதி பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்
மதுரை மாவட்ட 9, 10- ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகள் தொடக்க நிகழ்வில் குத்துவிளக்கேற்றிய பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன். உடன் மேலூா், சருகுவலையபட்டி, வண்டியூா் அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா்.
மதுரை மாவட்ட 9, 10- ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 9, 10- ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டிகளை மேலூா் கல்வி மாவட்ட அலுவலா் கணேசன் தொடங்கிவைத்தாா். சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன், மேலூா், சருகுவலையபட்டி, வண்டியூா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்கள் முனியாண்டி, காஜா சுல்தான் அப்துல்லா, சாந்தா ராம் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாகச் செயல்பட்டு போட்டிகளை நடத்தினா். 32 பிரிவுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சுமாா் 750 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது கலைத் திறன்களை வெளிப்படுத்தினா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





