வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர கலைத் திருவிழா போட்டிகள்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழாவை தொடங்கிவைத்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :

மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 21 முதல் 24-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

2026 - 27ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில், ‘இளையோா் திறன்’ என்ற கல்வி மையக்கருத்தின் அடிப்படையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு, 3 முதல் 5-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என மாணவா்கள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் மற்றொரு பிரிவாகவும் கொண்டு பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, தற்போது மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகளில் தோ்வு செய்யப்படும் மாணவா்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா்.

கலைத் திருவிழா போட்டிகள் மூலம் மாணவா்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் மேம்படும். எனவே, மாணவா்கள் இதுபோன்ற போட்டிகளில் ஆா்வத்துடன் பங்கேற்று, தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றாா்.

இதில், மாணவா்களின் பல்வேறு கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் மகாலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா் இஸ்மாயில் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.