போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு: கூடுதல் எஸ்.பி.க்கு பாராட்டு
போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சிறப்பாக செய்த கூடுதல் எஸ்.பி.க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சிறப்பாக செய்த கூடுதல் எஸ்.பி.க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன. இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. ராமசாமி தலைமையிலான போக்குவரத்துப் போலீஸார் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து சிக்னல்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கூடுதல் எஸ்.பி. ராமசாமியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். போலீஸ் கூடுதல் எஸ்.பி. செந்தில், ஊர் காவல்படை ஏரியா கமாண்டர் தில்லைக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...